Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 31:2 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 31 1 Samuel 31:2

1 சாமுவேல் 31:2
பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.

Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகனாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
சவுலுக்கும் அவனது மகன்களுக்கும் எதிராகக் கடுமையாய் பெலிஸ்தியர் போரிட்டனர். அவர்கள் சவுலின் மகன்களான யோனத்தான், அபினதாப், மற்றும் மல்கிசூகா ஆகியோரைக் கொன்றனர்.

Thiru Viviliam
பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.⒫

1 Samuel 31:11 Samuel 311 Samuel 31:3

King James Version (KJV)
And the Philistines followed hard upon Saul and upon his sons; and the Philistines slew Jonathan, and Abinadab, and Melchishua, Saul’s sons.

American Standard Version (ASV)
And the Philistines followed hard upon Saul and upon his sons; and the Philistines slew Jonathan, and Abinadab, and Malchishua, the sons of Saul.

Bible in Basic English (BBE)
And the Philistines overtook Saul and his sons; and they put to death Jonathan and Abinadab and Malchi-shua, the sons of Saul.

Darby English Bible (DBY)
And the Philistines followed hard upon Saul and upon his sons; and the Philistines smote Jonathan, and Abinadab, and Malchishua, Saul’s sons.

Webster’s Bible (WBT)
And the Philistines followed hard upon Saul and upon his sons; and the Philistines slew Jonathan, and Abinadab, and Malchi-shua, Saul’s sons.

World English Bible (WEB)
The Philistines followed hard on Saul and on his sons; and the Philistines killed Jonathan, and Abinadab, and Malchishua, the sons of Saul.

Young’s Literal Translation (YLT)
and the Philistines follow Saul and his sons, and the Philistines smite Jonathan, and Abinadab, and Malchishua, sons of Saul.

1 சாமுவேல் 1 Samuel 31:2
பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.
And the Philistines followed hard upon Saul and upon his sons; and the Philistines slew Jonathan, and Abinadab, and Melchishua, Saul's sons.

וַיַּדְבְּק֣וּwayyadbĕqûva-yahd-beh-KOO
פְלִשְׁתִּ֔יםpĕlištîmfeh-leesh-TEEM
אֶתʾetet
שָׁא֖וּלšāʾûlsha-OOL
וְאֶתwĕʾetveh-ET
בָּנָ֑יוbānāywba-NAV
וַיַּכּ֣וּwayyakkûva-YA-koo
פְלִשְׁתִּ֗יםpĕlištîmfeh-leesh-TEEM
אֶתʾetet
יְהֽוֹנָתָ֧ןyĕhônātānyeh-hoh-na-TAHN
וְאֶתwĕʾetveh-ET
אֲבִֽינָדָ֛בʾăbînādābuh-vee-na-DAHV
וְאֶתwĕʾetveh-ET
מַלְכִּישׁ֖וּעַmalkîšûaʿmahl-kee-SHOO-ah
בְּנֵ֥יbĕnêbeh-NAY
שָׁאֽוּל׃šāʾûlsha-OOL

Cross Reference

1 நாளாகமம் 8:33
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

1 சாமுவேல் 14:49
சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.

1 நாளாகமம் 9:39
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

2 இராஜாக்கள் 25:7
சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

2 சாமுவேல் 1:6
அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.

1 சாமுவேல் 23:17
நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.

1 சாமுவேல் 18:1
அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.

1 சாமுவேல் 14:22
எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.

1 சாமுவேல் 14:1
ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

1 சாமுவேல் 13:16
சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.

1 சாமுவேல் 13:2
இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான்.

யாத்திராகமம் 20:5
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.


Tags பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்
1 Samuel 31:2 in Tamil Concordance 1 Samuel 31:2 in Tamil Interlinear 1 Samuel 31:2 in Tamil Image