Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ruth 2:4 in Tamil

Home Bible Ruth Ruth 2 Ruth 2:4

ரூத் 2:4
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடு இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்தான். அவன் வேலைக்காரர்களை வாழ்த்தி, “கர்த்தர் உங்களோடு இருக்கட்டும்” என்று கூறினான். அதற்கு வேலைக்காரர்களும், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்றனர்.

Thiru Viviliam
சிறிது நேரம் கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து அங்கு வந்து சேர்ந்தார். அவர் அறுவடையாளர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!” என்றார். அவர்களும் “ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!” என்றார்கள்.

Ruth 2:3Ruth 2Ruth 2:5

King James Version (KJV)
And, behold, Boaz came from Bethlehem, and said unto the reapers, The LORD be with you. And they answered him, The LORD bless thee.

American Standard Version (ASV)
And, behold, Boaz came from Bethlehem, and said unto the reapers, Jehovah be with you. And they answered him, Jehovah bless thee.

Bible in Basic English (BBE)
And Boaz came from Beth-lehem, and said to the grain-cutters, The Lord be with you. And they made answer, The Lord give you his blessing.

Darby English Bible (DBY)
And behold, Boaz came from Bethlehem; and he said to the reapers, Jehovah be with you! And they said to him, Jehovah bless thee!

Webster’s Bible (WBT)
And behold, Boaz came from Beth-lehem, and said to the reapers, The LORD be with you. And they answered him, The LORD bless thee.

World English Bible (WEB)
Behold, Boaz came from Bethlehem, and said to the reapers, Yahweh be with you. They answered him, Yahweh bless you.

Young’s Literal Translation (YLT)
And lo, Boaz hath come from Beth-Lehem, and saith to the reapers, `Jehovah `is’ with you;’ and they say to him, `Jehovah doth bless thee.’

ரூத் Ruth 2:4
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
And, behold, Boaz came from Bethlehem, and said unto the reapers, The LORD be with you. And they answered him, The LORD bless thee.

וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
בֹ֗עַזbōʿazVOH-az
בָּ֚אbāʾba
מִבֵּ֣יתmibbêtmee-BATE
לֶ֔חֶםleḥemLEH-hem
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
לַקּֽוֹצְרִ֖יםlaqqôṣĕrîmla-koh-tseh-REEM
יְהוָ֣הyĕhwâyeh-VA
עִמָּכֶ֑םʿimmākemee-ma-HEM
וַיֹּ֥אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
ל֖וֹloh
יְבָֽרֶכְךָ֥yĕbārekkāyeh-va-rek-HA
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

2 தெசலோனிக்கேயர் 3:16
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

லுூக்கா 1:28
அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

சங்கீதம் 129:7
அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.

நியாயாதிபதிகள் 6:12
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

2 தீமோத்தேயு 4:22
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

2 யோவான் 1:10
ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.

1 தீமோத்தேயு 6:2
விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுகொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.

சங்கீதம் 133:1
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

சங்கீதம் 118:26
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

ரூத் 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.

யோசுவா 24:15
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

ஆதியாகமம் 18:19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.


Tags அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து அறுக்கிறவர்களைப் பார்த்து கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான் அதற்கு அவர்கள் கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்
Ruth 2:4 in Tamil Concordance Ruth 2:4 in Tamil Interlinear Ruth 2:4 in Tamil Image