நியாயாதிபதிகள் 2:11
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது,
Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேலர் தீயவற்றைச் செய்து பொய் தேவனான பாகாலை சேவிக்கத் தொடங்கினார்கள். ஜனங்கள் இந்த தீயகாரியத்தைச் செய்வதைக் கர்த்தர் கண்டார்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர்.
Other Title
இஸ்ரயேல் ஆண்டவரை விட்டு விலகுதல்
King James Version (KJV)
And the children of Israel did evil in the sight of the LORD, and served Baalim:
American Standard Version (ASV)
And the children of Israel did that which was evil in the sight of Jehovah, and served the Baalim;
Bible in Basic English (BBE)
And the children of Israel did evil in the eyes of the Lord and became servants to the Baals;
Darby English Bible (DBY)
And the people of Israel did what was evil in the sight of the LORD and served the Ba’als;
Webster’s Bible (WBT)
And the children of Israel did evil in the sight of the LORD, and served Baalim:
World English Bible (WEB)
The children of Israel did that which was evil in the sight of Yahweh, and served the Baals;
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel do the evil thing in the eyes of Jehovah, and serve the Baalim,
நியாயாதிபதிகள் Judges 2:11
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,
And the children of Israel did evil in the sight of the LORD, and served Baalim:
| וַיַּֽעֲשׂ֧וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO | |
| בְנֵֽי | bĕnê | veh-NAY | |
| יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֶת | ʾet | et | |
| הָרַ֖ע | hāraʿ | ha-RA | |
| בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וַיַּֽעַבְד֖וּ | wayyaʿabdû | va-ya-av-DOO | |
| אֶת | ʾet | et | |
| הַבְּעָלִֽים׃ | habbĕʿālîm | ha-beh-ah-LEEM |
Cross Reference
நியாயாதிபதிகள் 10:6
இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.
நியாயாதிபதிகள் 6:1
பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
நியாயாதிபதிகள் 4:1
ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.
நியாயாதிபதிகள் 3:7
இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,
நியாயாதிபதிகள் 13:1
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.
நியாயாதிபதிகள் 8:33
கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகல்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
ஓசியா 2:13
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 9:14
தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 2:23
நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாயோடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.
எஸ்றா 8:12
அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும் அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும்,
2 நாளாகமம் 33:6
அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.
2 நாளாகமம் 33:2
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
2 நாளாகமம் 28:2
இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.
1 இராஜாக்கள் 18:18
அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
1 சாமுவேல் 7:4
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்.
நியாயாதிபதிகள் 10:10
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.
நியாயாதிபதிகள் 3:12
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.
ஆதியாகமம் 38:7
யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்.
ஆதியாகமம் 13:13
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.
Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து பாகால்களைச் சேவித்து
Judges 2:11 in Tamil Concordance Judges 2:11 in Tamil Interlinear Judges 2:11 in Tamil Image