Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 24:10 in Tamil

Home Bible Joshua Joshua 24 Joshua 24:10

யோசுவா 24:10
பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன்.

Tamil Indian Revised Version
பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்கு விருப்பம் இல்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இந்தவிதமாக உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவித்தேன்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தராகிய, நான், பிலேயாம் கூறுவதைக் கேட்க மறுத்தேன். எனவே பிலேயாம் உங்களுக்கு நல்லவை நிகழவேண்டுமெனக் கேட்டான்! அவன் உங்களைப் பலமுறை ஆசீர்வதித்தான். நான் உங்களைக் காப்பாற்றி, தீமைகளினின்று விலக்கினேன்.

Thiru Viviliam
நான் பிலயாமுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை. அவன் உங்களுக்கு ஆசி வழங்கினான். உங்களைப் பாலாக்கின் கையினின்று விடுவித்தேன்.

Joshua 24:9Joshua 24Joshua 24:11

King James Version (KJV)
But I would not hearken unto Balaam; therefore he blessed you still: so I delivered you out of his hand.

American Standard Version (ASV)
but I would not hearken unto Balaam; therefore he blessed you still: so I delivered you out of his hand.

Bible in Basic English (BBE)
But I did not give ear to Balaam; and so he went on blessing you; and I kept you safe from him.

Darby English Bible (DBY)
but I would not hearken unto Balaam, and he blessed you expressly, and I delivered you out of his hand.

Webster’s Bible (WBT)
But I would not hearken to Balaam; therefore he blessed you still: so I delivered you out of his hand.

World English Bible (WEB)
but I would not listen to Balaam; therefore he blessed you still: so I delivered you out of his hand.

Young’s Literal Translation (YLT)
and I have not been willing to hearken to Balaam, and he doth greatly bless you, and I deliver you out of his hand.

யோசுவா Joshua 24:10
பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன்.
But I would not hearken unto Balaam; therefore he blessed you still: so I delivered you out of his hand.

וְלֹ֥אwĕlōʾveh-LOH
אָבִ֖יתִיʾābîtîah-VEE-tee
לִשְׁמֹ֣עַlišmōaʿleesh-MOH-ah
לְבִלְעָ֑םlĕbilʿāmleh-veel-AM
וַיְבָ֤רֶךְwaybārekvai-VA-rek
בָּרוֹךְ֙bārôkba-roke
אֶתְכֶ֔םʾetkemet-HEM
וָֽאַצִּ֥לwāʾaṣṣilva-ah-TSEEL
אֶתְכֶ֖םʾetkemet-HEM
מִיָּדֽוֹ׃miyyādômee-ya-DOH

Cross Reference

எண்ணாகமம் 22:11
பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம் பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.

எண்ணாகமம் 22:18
பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.

எண்ணாகமம் 22:35
கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.

எண்ணாகமம் 23:3
பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.

எண்ணாகமம் 23:15
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.

எண்ணாகமம் 24:5
யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!

உபாகமம் 23:5
உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.

ஏசாயா 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.


Tags பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான் இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன்
Joshua 24:10 in Tamil Concordance Joshua 24:10 in Tamil Interlinear Joshua 24:10 in Tamil Image