Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 32:19 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 32 Deuteronomy 32:19

உபாகமம் 32:19
கர்த்தர் அதைக் கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து:

Tamil Indian Revised Version
கர்த்தர் அதைக்கண்டு, தமது மகன்களும், மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, அவர்களைப் புறக்கணித்து:

Tamil Easy Reading Version
“கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார். ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்!

Thiru Viviliam
⁽தன் மைந்தரும் தம் மகளிரும்␢ தமக்குச் சினமூட்டியதை,␢ ஆண்டவர் கண்டு அவர்களை␢ இகழ்ந்து ஒதுக்கினார்.⁾

Deuteronomy 32:18Deuteronomy 32Deuteronomy 32:20

King James Version (KJV)
And when the LORD saw it, he abhorred them, because of the provoking of his sons, and of his daughters.

American Standard Version (ASV)
And Jehovah saw `it’, and abhorred `them’, Because of the provocation of his sons and his daughters.

Bible in Basic English (BBE)
And the Lord saw with disgust the evil-doing of his sons and daughters.

Darby English Bible (DBY)
And Jehovah saw it, and despised them, Because of the provoking of his sons and of his daughters.

Webster’s Bible (WBT)
And when the LORD saw it, he abhorred them, because of the provoking of his sons, and of his daughters.

World English Bible (WEB)
Yahweh saw [it], and abhorred [them], Because of the provocation of his sons and his daughters.

Young’s Literal Translation (YLT)
And Jehovah seeth and despiseth — For the provocation of His sons and His daughters.

உபாகமம் Deuteronomy 32:19
கர்த்தர் அதைக் கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து:
And when the LORD saw it, he abhorred them, because of the provoking of his sons, and of his daughters.

וַיַּ֥רְאwayyarva-YAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
וַיִּנְאָ֑ץwayyinʾāṣva-yeen-ATS
מִכַּ֥עַסmikkaʿasmee-KA-as
בָּנָ֖יוbānāywba-NAV
וּבְנֹתָֽיו׃ûbĕnōtāywoo-veh-noh-TAIV

Cross Reference

சங்கீதம் 106:40
அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.

ஏசாயா 1:2
வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.

நியாயாதிபதிகள் 2:14
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:16
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

சகரியா 11:8
ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.

ஆமோஸ் 3:2
பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

புலம்பல் 2:6
தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.

எரேமியா 44:21
யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும் உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார்.

எரேமியா 11:15
துர்ச்சனரோடு மகா தீவினைசெய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகப்பண்ணுவார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே.

சங்கீதம் 82:6
நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

சங்கீதம் 78:59
தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,

சங்கீதம் 10:3
துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.

சங்கீதம் 5:4
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல, தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.

லேவியராகமம் 26:11
உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.


Tags கர்த்தர் அதைக் கண்டு தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி அவர்களைப் புறக்கணித்து
Deuteronomy 32:19 in Tamil Concordance Deuteronomy 32:19 in Tamil Interlinear Deuteronomy 32:19 in Tamil Image