Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 28:33 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 28 Deuteronomy 28:33

உபாகமம் 28:33
உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.

Tamil Indian Revised Version
உன் நிலத்தின் பலனையும், உன் உழைப்பின் எல்லாப் பலனையும் நீ அறியாத மக்கள் சாப்பிடுவார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.

Tamil Easy Reading Version
“நீ அறிந்திராத நாடு உனது விளைச்சல் எல்லாவற்றையும், மற்றும் நீ உழைத்துப் பெற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும். ஜனங்கள் உன்னை மோசமாக நடத்துவார்கள். ஜனங்கள் உன்னைப் பழிப்பார்கள்.

Thiru Viviliam
நீ அறியாத மக்களினம் உன் நிலத்தின் கனிகளையும் உன் உழைப்பின் பயனையும் உண்ணும். நீயோ எந்நாளும் ஒடுக்கப்பட்டவனும் நொறுக்கப்பட்டவனுமாய் இருப்பாய்.

Deuteronomy 28:32Deuteronomy 28Deuteronomy 28:34

King James Version (KJV)
The fruit of thy land, and all thy labors, shall a nation which thou knowest not eat up; and thou shalt be only oppressed and crushed alway:

American Standard Version (ASV)
The fruit of thy ground, and all thy labors, shall a nation which thou knowest not eat up; and thou shalt be only oppressed and crushed alway;

Bible in Basic English (BBE)
The fruit of your land and all the work of your hands will be food for a nation which is strange to you and to your fathers; you will only be crushed down and kept under for ever:

Darby English Bible (DBY)
The fruit of thy ground and all thy labour, shall a people that thou knowest not eat up; and thou shalt be only oppressed and crushed continually.

Webster’s Bible (WBT)
The fruit of thy land, and all thy labors, shall be eaten by a nation which thou knowest not: and thou shalt be only oppressed and crushed always:

World English Bible (WEB)
The fruit of your ground, and all your labors, shall a nation which you don’t know eat up; and you shall be only oppressed and crushed always;

Young’s Literal Translation (YLT)
The fruit of thy ground, and all thy labour, eat up doth a people whom thou hast not known; and thou hast been only oppressed and bruised all the days;

உபாகமம் Deuteronomy 28:33
உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.
The fruit of thy land, and all thy labors, shall a nation which thou knowest not eat up; and thou shalt be only oppressed and crushed alway:

פְּרִ֤יpĕrîpeh-REE
אַדְמָֽתְךָ֙ʾadmātĕkāad-ma-teh-HA
וְכָלwĕkālveh-HAHL
יְגִ֣יעֲךָ֔yĕgîʿăkāyeh-ɡEE-uh-HA
יֹאכַ֥לyōʾkalyoh-HAHL
עַ֖םʿamam
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
יָדָ֑עְתָּyādāʿĕttāya-DA-eh-ta
וְהָיִ֗יתָwĕhāyîtāveh-ha-YEE-ta
רַ֛קraqrahk
עָשׁ֥וּקʿāšûqah-SHOOK
וְרָצ֖וּץwĕrāṣûṣveh-ra-TSOOTS
כָּלkālkahl
הַיָּמִֽים׃hayyāmîmha-ya-MEEM

Cross Reference

எரேமியா 5:17
அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும் உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.

லேவியராகமம் 26:16
நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.

உபாகமம் 28:29
குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்; உதவிசெய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.

உபாகமம் 28:51
நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாகவைக்கமாட்டான்.

நெகேமியா 9:36
இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம், இதோ பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்.

ஏசாயா 1:7
உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம் போல் இருக்கிறது.

எரேமியா 4:17
அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 5:15
இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.

எரேமியா 8:16
தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.


Tags உன் நிலத்தின் கனியையும் உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள் நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்
Deuteronomy 28:33 in Tamil Concordance Deuteronomy 28:33 in Tamil Interlinear Deuteronomy 28:33 in Tamil Image