உபாகமம் 23:5
உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்க விருப்பமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புசெலுத்தியதால், உன் தேவனாகிய கர்த்தர் அந்த சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறச்செய்தார்.
Tamil Easy Reading Version
ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் பிலேயாம் கூறியதைக் கேட்க மறுத்தார். கர்த்தர் அந்த சாபத்தையெல்லாம் உங்களுக்காக ஆசீர்வாதங்களாக்கினார். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களை நேசிக்கின்றார்.
Thiru Viviliam
ஆயினும், உன் கடவுளாகிய ஆண்டவர் பிலயாமுக்குச் செவிகொடுக்கமனமின்றி, சாபத்தை உனக்கு ஆசியாக மாற்றினார். ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்மீது அன்புகூர்கிறார்.
King James Version (KJV)
Nevertheless the LORD thy God would not hearken unto Balaam; but the LORD thy God turned the curse into a blessing unto thee, because the LORD thy God loved thee.
American Standard Version (ASV)
Nevertheless Jehovah thy God would not hearken unto Balaam; but Jehovah thy God turned the curse into a blessing unto thee, because Jehovah thy God loved thee.
Bible in Basic English (BBE)
But the Lord your God would not give ear to Balaam, but let the curse be changed into a blessing to you, because of his love for you.
Darby English Bible (DBY)
But Jehovah thy God would not listen to Balaam; and Jehovah thy God turned the curse into blessing unto thee, because Jehovah thy God loved thee.
Webster’s Bible (WBT)
Nevertheless, the LORD thy God would not hearken to Balaam: but the LORD thy God turned the curse into a blessing to thee, because the LORD thy God loved thee.
World English Bible (WEB)
Nevertheless Yahweh your God wouldn’t listen to Balaam; but Yahweh your God turned the curse into a blessing to you, because Yahweh your God loved you.
Young’s Literal Translation (YLT)
and Jehovah thy God hath not been willing to hearken unto Balaam, and Jehovah thy God doth turn for thee the reviling to a blessing, because Jehovah thy God hath loved thee;
உபாகமம் Deuteronomy 23:5
உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.
Nevertheless the LORD thy God would not hearken unto Balaam; but the LORD thy God turned the curse into a blessing unto thee, because the LORD thy God loved thee.
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| אָבָ֞ה | ʾābâ | ah-VA | |
| יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֶ֙יךָ֙ | ʾĕlōhêkā | ay-loh-HAY-HA | |
| לִשְׁמֹ֣עַ | lišmōaʿ | leesh-MOH-ah | |
| אֶל | ʾel | el | |
| בִּלְעָ֔ם | bilʿām | beel-AM | |
| וַיַּֽהֲפֹךְ֩ | wayyahăpōk | va-YA-huh-foke | |
| יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֶ֧יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha | |
| לְּךָ֛ | lĕkā | leh-HA | |
| אֶת | ʾet | et | |
| הַקְּלָלָ֖ה | haqqĕlālâ | ha-keh-la-LA | |
| לִבְרָכָ֑ה | librākâ | leev-ra-HA | |
| כִּ֥י | kî | kee | |
| אֲהֵֽבְךָ֖ | ʾăhēbĕkā | uh-hay-veh-HA | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֶֽיךָ׃ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
Cross Reference
உபாகமம் 7:7
சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.
ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
எபேசியர் 2:4
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
2 கொரிந்தியர் 4:17
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
ரோமர் 11:28
சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
எண்ணாகமம் 24:9
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
எண்ணாகமம் 23:5
கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
மீகா 6:5
என் ஜனமே மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும் பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும் நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
எசேக்கியேல் 16:8
நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.
எரேமியா 31:3
பூர்வகாலமுதல் கர்த்தர் எங்களுக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
நீதிமொழிகள் 26:2
அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது.
சங்கீதம் 73:1
சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.
உபாகமம் 33:3
மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்களெல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில்விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.
எண்ணாகமம் 23:16
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
எண்ணாகமம் 22:35
கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.
ரோமர் 9:13
அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
மல்கியா 1:2
நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரனல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.
Tags உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல் உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால் உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்
Deuteronomy 23:5 in Tamil Concordance Deuteronomy 23:5 in Tamil Interlinear Deuteronomy 23:5 in Tamil Image