உபாகமம் 21:18
தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
Tamil Indian Revised Version
தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால்,
Tamil Easy Reading Version
“தன் தந்தையின் சொல்லையும், தாயின் சொல்லையும் கேட்காமலும், அவர்களுக்கு அடங்காமலும் கீழ்ப்படிய மறுக்கின்ற தண்டனைக்குரிய மகன் ஒருவனுக்கு இருந்தால் அவனை தண்டித்தும் இன்னும் அவர்கள் சொன்னபடிக் கேட்க மறுப்பவனாய் இருந்தால்,
Thiru Viviliam
ஒருவனுடைய புதல்வன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய், தந்தை சொல்லையோ தாய் சொல்லையோ கேளாமல், அவர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் அடங்காமல் போனால்,
Title
கீழ்ப்படிய மறுக்கும் பிள்ளைகள்
Other Title
கீழ்ப்படியாத மகனைக் குறித்த விதிமுறை
King James Version (KJV)
If a man have a stubborn and rebellious son, which will not obey the voice of his father, or the voice of his mother, and that, when they have chastened him, will not hearken unto them:
American Standard Version (ASV)
If a man have a stubborn and rebellious son, that will not obey the voice of his father, or the voice of his mother, and, though they chasten him, will not hearken unto them;
Bible in Basic English (BBE)
If a man has a son who is hard-hearted and uncontrolled, who gives no attention to the voice of his father and mother, and will not be ruled by them, though they give him punishment:
Darby English Bible (DBY)
If a man have an unmanageable and rebellious son, who hearkeneth not unto the voice of his father, nor unto the voice of his mother, and they have chastened him, but he hearkeneth not unto them;
Webster’s Bible (WBT)
If a man shall have a stubborn and rebellious son, who will not obey the voice of his father, or the voice of his mother, and who, when they have chastened him, will not hearken to them:
World English Bible (WEB)
If a man have a stubborn and rebellious son, who will not obey the voice of his father, or the voice of his mother, and, though they chasten him, will not listen to them;
Young’s Literal Translation (YLT)
`When a man hath a son apostatizing and rebellious — he is not hearkening to the voice of his father, and to the voice of his mother, and they have chastised him, and he doth not hearken unto them —
உபாகமம் Deuteronomy 21:18
தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
If a man have a stubborn and rebellious son, which will not obey the voice of his father, or the voice of his mother, and that, when they have chastened him, will not hearken unto them:
| כִּֽי | kî | kee | |
| יִהְיֶ֣ה | yihye | yee-YEH | |
| לְאִ֗ישׁ | lĕʾîš | leh-EESH | |
| בֵּ֚ן | bēn | bane | |
| סוֹרֵ֣ר | sôrēr | soh-RARE | |
| וּמוֹרֶ֔ה | ûmôre | oo-moh-REH | |
| אֵינֶ֣נּוּ | ʾênennû | ay-NEH-noo | |
| שֹׁמֵ֔עַ | šōmēaʿ | shoh-MAY-ah | |
| בְּק֥וֹל | bĕqôl | beh-KOLE | |
| אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO | |
| וּבְק֣וֹל | ûbĕqôl | oo-veh-KOLE | |
| אִמּ֑וֹ | ʾimmô | EE-moh | |
| וְיִסְּר֣וּ | wĕyissĕrû | veh-yee-seh-ROO | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| יִשְׁמַ֖ע | yišmaʿ | yeesh-MA | |
| אֲלֵיהֶֽם׃ | ʾălêhem | uh-lay-HEM |
Cross Reference
யாத்திராகமம் 20:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
லேவியராகமம் 19:3
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும், தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நீதிமொழிகள் 30:11
தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.
நீதிமொழிகள் 30:17
தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.
ஏசாயா 1:2
வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.
ஏசாயா 1:5
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
எரேமியா 5:3
கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
எரேமியா 31:18
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.
எசேக்கியேல் 22:7
உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.
எசேக்கியேல் 24:13
உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
ஆமோஸ் 4:11
சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எபேசியர் 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
எபிரெயர் 12:9
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
நீதிமொழிகள் 29:17
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
நீதிமொழிகள் 28:24
தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.
யாத்திராகமம் 21:17
தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
லேவியராகமம் 21:9
ஆசாரியனுடைய குமாரத்தி வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.
உபாகமம் 8:5
ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.
உபாகமம் 27:16
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
2 சாமுவேல் 7:14
நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
நீதிமொழிகள் 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
நீதிமொழிகள் 13:24
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
நீதிமொழிகள் 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
நீதிமொழிகள் 19:18
நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
நீதிமொழிகள் 20:20
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.
நீதிமொழிகள் 22:15
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
நீதிமொழிகள் 23:13
பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
யாத்திராகமம் 21:15
தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
Tags தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும் அவர்களால் தண்டிக்கப்பட்டும் அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்
Deuteronomy 21:18 in Tamil Concordance Deuteronomy 21:18 in Tamil Interlinear Deuteronomy 21:18 in Tamil Image