உபாகமம் 11:8
ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,
Tamil Indian Revised Version
ஆகையால் நீங்கள் பலப்படுவதற்கும்,
Tamil Easy Reading Version
“ஆகவே நான் இன்று உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பின் நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆவீர்கள். அதனால், யோர்தான் ஆற்றினைக் கடந்து, நீங்கள் நுழையத் தயாராகவுள்ள இந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.
Thiru Viviliam
எனவே, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். அதனால் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி கடந்து சென்றடையும் நாட்டை உடைமையாக்கும் வலிமை பெறுவீர்கள்.
Other Title
வாக்களிக்கப்பட்ட நாட்டின் சிறப்புகள்
King James Version (KJV)
Therefore shall ye keep all the commandments which I command you this day, that ye may be strong, and go in and possess the land, whither ye go to possess it;
American Standard Version (ASV)
Therefore shall ye keep all the commandment which I command thee this day, that ye may be strong, and go in and possess the land, whither ye go over to possess it;
Bible in Basic English (BBE)
So keep all the orders which I give you today, so that you may be strong, and go in and take the land which is to be your heritage;
Darby English Bible (DBY)
Keep then all the commandment which I command you this day, that ye may be strong, and enter in and possess the land, whither ye pass over to possess it;
Webster’s Bible (WBT)
Therefore shall ye keep all the commandments which I command you this day, that ye may be strong, and go in and possess the land, whither ye go to possess it;
World English Bible (WEB)
Therefore shall you keep all the commandment which I command you this day, that you may be strong, and go in and possess the land, where you go over to possess it;
Young’s Literal Translation (YLT)
and ye have kept all the command which I am commanding thee to-day, so that ye are strong, and have gone in, and possessed the land whither ye are passing over to possess it,
உபாகமம் Deuteronomy 11:8
ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,
Therefore shall ye keep all the commandments which I command you this day, that ye may be strong, and go in and possess the land, whither ye go to possess it;
| וּשְׁמַרְתֶּם֙ | ûšĕmartem | oo-sheh-mahr-TEM | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הַמִּצְוָ֔ה | hammiṣwâ | ha-meets-VA | |
| אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER | |
| אָֽנֹכִ֥י | ʾānōkî | ah-noh-HEE | |
| מְצַוְּךָ֖ | mĕṣawwĕkā | meh-tsa-weh-HA | |
| הַיּ֑וֹם | hayyôm | HA-yome | |
| לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an | |
| תֶּֽחֶזְק֗וּ | teḥezqû | teh-hez-KOO | |
| וּבָאתֶם֙ | ûbāʾtem | oo-va-TEM | |
| וִֽירִשְׁתֶּ֣ם | wîrištem | vee-reesh-TEM | |
| אֶת | ʾet | et | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| אַתֶּ֛ם | ʾattem | ah-TEM | |
| עֹֽבְרִ֥ים | ʿōbĕrîm | oh-veh-REEM | |
| שָׁ֖מָּה | šāmmâ | SHA-ma | |
| לְרִשְׁתָּֽהּ׃ | lĕrištāh | leh-reesh-TA |
Cross Reference
யோசுவா 1:6
பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.
உபாகமம் 31:23
அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.
கொலோசெயர் 1:11
சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.
பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
எபேசியர் 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
எபேசியர் 3:16
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,
2 கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
தானியேல் 10:19
பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.
ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
சங்கீதம் 138:3
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
சங்கீதம் 116:12
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
உபாகமம் 31:6
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
உபாகமம் 28:47
சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,
உபாகமம் 26:16
இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழுஇருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.
உபாகமம் 10:12
இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,
உபாகமம் 8:10
ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.
Tags ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்
Deuteronomy 11:8 in Tamil Concordance Deuteronomy 11:8 in Tamil Interlinear Deuteronomy 11:8 in Tamil Image