2 சாமுவேல் 23:4
அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
Tamil Indian Revised Version
அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
Tamil Easy Reading Version
உதயகால ஒளியைப் போன்றிருப்பான்: மேகங்கள் அற்ற அதிகாலையைப்போல இருப்பான். மழையைத் தொடர்ந்து தோன்றும் வெளிச்சத்தைப் போன்றிருப்பான். அம்மழை நிலத்திலிருந்து பசும்புல்லை எழச்செய்யும்’ என்று சொன்னார்.
Thiru Viviliam
⁽விடியற்கால ஒளியெனத்␢ திகழ்கின்றான்;␢ முகிலற்ற காலை கதிரவனென␢ ஒளிர்கின்றான்;␢ மண்ணின்று புல் முளைக்கச்␢ செய்யும் மழையென␢ விளங்குகின்றான்’.⁾
King James Version (KJV)
And he shall be as the light of the morning, when the sun riseth, even a morning without clouds; as the tender grass springing out of the earth by clear shining after rain.
American Standard Version (ASV)
`He shall be’ as the light of the morning, when the sun riseth, A morning without clouds, `When’ the tender grass `springeth’ out of the earth, Through clear shining after rain.
Bible in Basic English (BBE)
It is as the light of the morning, when the sun comes up, a morning without clouds; making young grass come to life from the earth.
Darby English Bible (DBY)
And [he shall be] as the light or the morning, [like] the rising of the sun, A morning without clouds; [When] from the sunshine, after rain, The green grass springeth from the earth.
Webster’s Bible (WBT)
And he shall be as the light of the morning, when the sun riseth, even a morning without clouds; as the tender grass springing out of the earth by clear shining after rain.
World English Bible (WEB)
[He shall be] as the light of the morning, when the sun rises, A morning without clouds, [When] the tender grass [springs] out of the earth, Through clear shining after rain.
Young’s Literal Translation (YLT)
And as the light of morning he riseth, A morning sun — no clouds! By the shining, by the rain, Tender grass of the earth!
2 சாமுவேல் 2 Samuel 23:4
அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
And he shall be as the light of the morning, when the sun riseth, even a morning without clouds; as the tender grass springing out of the earth by clear shining after rain.
| וּכְא֥וֹר | ûkĕʾôr | oo-heh-ORE | |
| בֹּ֖קֶר | bōqer | BOH-ker | |
| יִזְרַח | yizraḥ | yeez-RAHK | |
| שָׁ֑מֶשׁ | šāmeš | SHA-mesh | |
| בֹּ֚קֶר | bōqer | BOH-ker | |
| לֹ֣א | lōʾ | loh | |
| עָב֔וֹת | ʿābôt | ah-VOTE | |
| מִנֹּ֥גַהּ | minnōgah | mee-NOH-ɡa | |
| מִמָּטָ֖ר | mimmāṭār | mee-ma-TAHR | |
| דֶּ֥שֶׁא | dešeʾ | DEH-sheh | |
| מֵאָֽרֶץ׃ | mēʾāreṣ | may-AH-rets |
Cross Reference
நியாயாதிபதிகள் 5:31
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.
ஓசியா 6:5
ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்.
நீதிமொழிகள் 4:18
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.
சங்கீதம் 89:36
அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
சங்கீதம் 72:6
புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
யோவான் 1:7
அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
லுூக்கா 1:78
அந்தகாரத்திலும் மரண இருளிலும், உட்கார்ந்திக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
மல்கியா 4:2
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
மீகா 5:7
யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.
ஓசியா 6:3
அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.
ஏசாயா 60:18
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.
ஏசாயா 60:3
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
ஏசாயா 4:2
இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.
சங்கீதம் 110:3
உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.
உபாகமம் 32:2
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
Tags அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்
2 Samuel 23:4 in Tamil Concordance 2 Samuel 23:4 in Tamil Interlinear 2 Samuel 23:4 in Tamil Image