2 சாமுவேல் 21:7
ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
Tamil Indian Revised Version
ஆனாலும் தாவீதும் சவுலின் மகனான யோனத்தானும் கர்த்தருக்கு செய்துகொண்ட ஆணைக்காக, ராஜா சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
Tamil Easy Reading Version
ஆனால் அரசன் யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தைப் பாதுகாத்தான். யோனத்தான் சவுலின் மகன். ஆனால் கர்த்தருடைய பெயரில் யோனத்தானுக்கு தாவீது ஒரு வாக்குறுதி அளித்திருந்தான். ஆகையால் அரசன் மேவிபோசேத்தை அவர்கள் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டான்.
Thiru Viviliam
ஆனால், தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டுச் சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த மெபிபொசேத்தை அரசர் தப்பவிட்டார்.
King James Version (KJV)
But the king spared Mephibosheth, the son of Jonathan the son of Saul, because of the LORD’s oath that was between them, between David and Jonathan the son of Saul.
American Standard Version (ASV)
But the king spared Mephibosheth, the son of Jonathan the son of Saul, because of Jehovah’s oath that was between them, between David and Jonathan the son of Saul.
Bible in Basic English (BBE)
But the king did not give up Mephibosheth, the son of Saul’s son Jonathan, because of the Lord’s oath made between David and Jonathan, the son of Saul.
Darby English Bible (DBY)
But the king spared Mephibosheth, the son of Jonathan the son of Saul, because of Jehovah’s oath that was between them, between David and Jonathan the son of Saul.
Webster’s Bible (WBT)
But the king spared Mephibosheth, the son of Jonathan, the son of Saul, because of the LORD’S oath that was between them, between David and Jonathan the son of Saul.
World English Bible (WEB)
But the king spared Mephibosheth, the son of Jonathan the son of Saul, because of Yahweh’s oath that was between them, between David and Jonathan the son of Saul.
Young’s Literal Translation (YLT)
and the king hath pity on Mephibosheth son of Jonathan, son of Saul, because of the oath of Jehovah that `is’ between them, between David and Jonathan son of Saul;
2 சாமுவேல் 2 Samuel 21:7
ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
But the king spared Mephibosheth, the son of Jonathan the son of Saul, because of the LORD's oath that was between them, between David and Jonathan the son of Saul.
| וַיַּחְמֹ֣ל | wayyaḥmōl | va-yahk-MOLE | |
| הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| עַל | ʿal | al | |
| מְפִיבֹ֖שֶׁת | mĕpîbōšet | meh-fee-VOH-shet | |
| בֶּן | ben | ben | |
| יְהֽוֹנָתָ֣ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN | |
| בֶּן | ben | ben | |
| שָׁא֑וּל | šāʾûl | sha-OOL | |
| עַל | ʿal | al | |
| שְׁבֻעַ֤ת | šĕbuʿat | sheh-voo-AT | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| בֵּֽינֹתָ֔ם | bênōtām | bay-noh-TAHM | |
| בֵּ֣ין | bên | bane | |
| דָּוִ֔ד | dāwid | da-VEED | |
| וּבֵ֖ין | ûbên | oo-VANE | |
| יְהֽוֹנָתָ֥ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN | |
| בֶּן | ben | ben | |
| שָׁאֽוּל׃ | šāʾûl | sha-OOL |
Cross Reference
2 சாமுவேல் 4:4
சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவன் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழந்து முடவனானான்; அவனுக்கு மேவிபோசேத் என்று பேர்.
1 சாமுவேல் 23:18
அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.
1 சாமுவேல் 20:15
கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.
1 சாமுவேல் 20:8
ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.
1 சாமுவேல் 18:3
யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.
2 சாமுவேல் 9:10
ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நிமித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்குப் பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.
1 சாமுவேல் 20:42
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். [] பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.
1 சாமுவேல் 20:17
யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.
2 சாமுவேல் 19:25
அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்கொண்டுவருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடுகூட வராமல்போனது என்ன என்று கேட்டான்.
2 சாமுவேல் 16:4
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
2 சாமுவேல் 9:7
தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான்நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக்கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.
Tags ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம் ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு
2 Samuel 21:7 in Tamil Concordance 2 Samuel 21:7 in Tamil Interlinear 2 Samuel 21:7 in Tamil Image