1 சாமுவேல் 28:3
சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான்.
Tamil Indian Revised Version
சாமுவேல் இதற்கு முன்பே இறந்துபோனான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவனுடைய ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் செய்தார்கள். சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டான்.
Tamil Easy Reading Version
சாமுவேல் மரித்ததும், அனைத்து இஸ்ரவேலரும் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். சாமுவேலை அவனது தாய், மண்ணான ராமாவில் அடக்கம் செய்திருந்தனர். சவுல் மரித்தவர்களின் ஆவிகளோடு பேசுகிறவர்களையும் ஆரூடம், குறி சொல்கிறவர்களையும் நகரத்தில் இராதபடித் துரத்தியிருந்தான்.
Thiru Viviliam
சாமுவேல் இறந்தார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்காகத் துக்கம் கொண்டாடியபின் அவரது நகரான இராமாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியக்காரரையும் குறிசொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தியிருந்தார்.⒫
Title
சவுலும் எந்தோரின் பெண்ணும்
Other Title
சவுல் குறிகேட்டல்
King James Version (KJV)
Now Samuel was dead, and all Israel had lamented him, and buried him in Ramah, even in his own city. And Saul had put away those that had familiar spirits, and the wizards, out of the land.
American Standard Version (ASV)
Now Samuel was dead, and all Israel had lamented him, and buried him in Ramah, even in his own city. And Saul had put away those that had familiar spirits, and the wizards, out of the land.
Bible in Basic English (BBE)
Now Samuel was dead, and all Israel, after weeping for him, had put his body in its last resting-place in Ramah, his town. And Saul had put away from the land all those who had control of spirits and who made use of secret arts.
Darby English Bible (DBY)
(Now Samuel was dead, and all Israel had lamented him, and they had buried him in Ramah, even in his own city. And Saul had put away the necromancers and the soothsayers out of the land.)
Webster’s Bible (WBT)
Now Samuel was dead, and all Israel had lamented him, and buried him in Ramah, even in his own city. And Saul had put away those that had familiar spirits, and the wizards, out of the land.
World English Bible (WEB)
Now Samuel was dead, and all Israel had lamented him, and buried him in Ramah, even in his own city. Saul had put away those who had familiar spirits, and the wizards, out of the land.
Young’s Literal Translation (YLT)
And Samuel hath died, and all Israel mourn for him, and bury him in Ramah, even in his city, and Saul hath turned aside those having familiar spirits, and the wizards, out of the land.
1 சாமுவேல் 1 Samuel 28:3
சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான்.
Now Samuel was dead, and all Israel had lamented him, and buried him in Ramah, even in his own city. And Saul had put away those that had familiar spirits, and the wizards, out of the land.
| וּשְׁמוּאֵ֣ל | ûšĕmûʾēl | oo-sheh-moo-ALE | |
| מֵ֔ת | mēt | mate | |
| וַיִּסְפְּדוּ | wayyispĕdû | va-yees-peh-DOO | |
| לוֹ֙ | lô | loh | |
| כָּל | kāl | kahl | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וַיִּקְבְּרֻ֥הוּ | wayyiqbĕruhû | va-yeek-beh-ROO-hoo | |
| בָֽרָמָ֖ה | bārāmâ | va-ra-MA | |
| וּבְעִיר֑וֹ | ûbĕʿîrô | oo-veh-ee-ROH | |
| וְשָׁא֗וּל | wĕšāʾûl | veh-sha-OOL | |
| הֵסִ֛יר | hēsîr | hay-SEER | |
| הָֽאֹב֥וֹת | hāʾōbôt | ha-oh-VOTE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַיִּדְּעֹנִ֖ים | hayyiddĕʿōnîm | ha-yee-deh-oh-NEEM | |
| מֵֽהָאָֽרֶץ׃ | mēhāʾāreṣ | MAY-ha-AH-rets |
Cross Reference
1 சாமுவேல் 25:1
சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
லேவியராகமம் 20:27
அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
லேவியராகமம் 19:31
அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
யாத்திராகமம் 22:18
சூனியக்காரியை உயிரோடே வைக்க வேண்டாம்.
உபாகமம் 18:10
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16
நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
ஏசாயா 57:1
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
1 சாமுவேல் 28:9
அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
1 சாமுவேல் 15:23
இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியபாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
1 சாமுவேல் 7:17
அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது, அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
லேவியராகமம் 20:6
அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
Tags சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான் இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள் சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான்
1 Samuel 28:3 in Tamil Concordance 1 Samuel 28:3 in Tamil Interlinear 1 Samuel 28:3 in Tamil Image