1 நாளாகமம் 16:26
சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
Tamil Indian Revised Version
அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
Tamil Easy Reading Version
ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து தெய்வங்களும் பயனற்ற உருவச் சிலைகளே. ஆனால் கர்த்தர் ஆகாயத்தை உண்டாக்கினார்!
Thiru Viviliam
⁽மக்களினங்களின் தெய்வங்கள்␢ அனைத்தும் வெறும் சிலைகளே!␢ ஆண்டவரோ விண்ணுலகைப்␢ படைத்தவர்!⁾
King James Version (KJV)
For all the gods of the people are idols: but the LORD made the heavens.
American Standard Version (ASV)
For all the gods of the peoples are idols: But Jehovah made the heavens.
Bible in Basic English (BBE)
For all the gods of the nations are false gods; but the Lord made the heavens.
Darby English Bible (DBY)
For all the gods of the peoples are idols; But Jehovah made the heavens.
Webster’s Bible (WBT)
For all the gods of the people are idols: but the LORD made the heavens.
World English Bible (WEB)
For all the gods of the peoples are idols: But Yahweh made the heavens.
Young’s Literal Translation (YLT)
For all gods of the peoples `are’ nought, And Jehovah the heavens hath made.
1 நாளாகமம் 1 Chronicles 16:26
சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
For all the gods of the people are idols: but the LORD made the heavens.
| כִּ֠י | kî | kee | |
| כָּל | kāl | kahl | |
| אֱלֹהֵ֤י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| הָֽעַמִּים֙ | hāʿammîm | ha-ah-MEEM | |
| אֱלִילִ֔ים | ʾĕlîlîm | ay-lee-LEEM | |
| וַֽיהוָ֖ה | wayhwâ | vai-VA | |
| שָׁמַ֥יִם | šāmayim | sha-MA-yeem | |
| עָשָֽׂה׃ | ʿāśâ | ah-SA |
Cross Reference
சங்கீதம் 102:25
நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
லேவியராகமம் 19:4
விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
ஏசாயா 44:24
உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
ஏசாயா 42:5
வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.
வெளிப்படுத்தின விசேஷம் 14:7
மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.
1 கொரிந்தியர் 8:4
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:26
இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.
எரேமியா 10:10
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
ஏசாயா 44:9
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
ஏசாயா 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
சங்கீதம் 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
Tags சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்
1 Chronicles 16:26 in Tamil Concordance 1 Chronicles 16:26 in Tamil Interlinear 1 Chronicles 16:26 in Tamil Image