Esther 10 KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மன்னர் அகஸ்வேர் நிலங்களின் மீதும், கடலின் தீவுகளின் மீதும் தீர்வை விதித்தார்.2 அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழுவிவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?3 யூதராகிய மொர்தக்காய், மன்னர் அகஸ்வேருக்கு அடுத்த நிலைபெற்று, யூதருள் மேன்மை நிறைந்தவராகவும், தம் சகோதரர் பலருக்கு இனியவராகவும், தம் மக்களின் நன்மையை நாடுபவராகவும், தம் இனத்தார் அனைவரின் நல்வாழ்வுக்காகப் பரிந்துரை செய்பவராகவும் விளங்கினார்.