கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
சங்கீதம் 119:138நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.
சங்கீதம் 119:139என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.
சங்கீதம் 119:140உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
சங்கீதம் 119:141நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
சங்கீதம் 119:142உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
சங்கீதம் 119:143இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
சங்கீதம் 119:144உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.