Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 30:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 30 நீதிமொழிகள் 30:13

நீதிமொழிகள் 30:13
வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.

Tamil Indian Revised Version
வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.

Tamil Easy Reading Version
சிலர் தம்மை மிகவும் நல்லவர்களாக எண்ணிக் கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களை விடத் தம்மை மிக நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள்.

திருவிவிலியம்
⁽கண்களில் இறுமாப்பு, பார்வையில் ஆணவம் — இத்தகைய மக்களும் உண்டு.⁾

Proverbs 30:12Proverbs 30Proverbs 30:14

King James Version (KJV)
There is a generation, O how lofty are their eyes! and their eyelids are lifted up.

American Standard Version (ASV)
There is a generation, oh how lofty are their eyes! And their eyelids are lifted up.

Bible in Basic English (BBE)
There is a generation, O how full of pride are their eyes! O how their brows are lifted up!

Darby English Bible (DBY)
there is a generation, — how lofty are their eyes, how their eyelids are lifted up!

World English Bible (WEB)
There is a generation, oh how lofty are their eyes! Their eyelids are lifted up.

Young’s Literal Translation (YLT)
A generation — how high are their eyes, Yea, their eyelids are lifted up.

நீதிமொழிகள் Proverbs 30:13
வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.
There is a generation, O how lofty are their eyes! and their eyelids are lifted up.

דּ֭וֹרdôrdore
מָהma
רָמ֣וּrāmûra-MOO
עֵינָ֑יוʿênāyway-NAV
וְ֝עַפְעַפָּ֗יוwĕʿapʿappāywVEH-af-ah-PAV
יִנָּשֵֽׂאוּ׃yinnāśēʾûyee-na-say-OO

இணை வசனம்

Proverbs 6:17
அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.

Isaiah 2:11
நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.

Habakkuk 2:4
இதோ அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

Daniel 11:36
ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

Ezekiel 28:9
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே,

Ezekiel 28:2
மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

Isaiah 3:16
பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.

Proverbs 21:4
மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.

Psalm 131:1
கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

Psalm 101:5
பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

2 Thessalonians 2:3
எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.


Tags வேறொரு சந்ததியாருமுண்டு அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்
நீதிமொழிகள் 30:13 Concordance நீதிமொழிகள் 30:13 Interlinear நீதிமொழிகள் 30:13 Image