🏠  Lyrics  Chords  Bible 

வல்லமையின் ஆவியானவர் PPT

Vallamaiyin Aaviyanavar
வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை – ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
1. Power ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன் கசப்புகளை
2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை ஊழவெசழட பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன்நான்
3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன்
மீட்பு பெறும் அனைவருக்கும் -நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்
4. உலகத்திற்கு வெளிச்சம் நான்
இந்த ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் – நான்
எப்போதும் சுவை தருவேன்
5. கர்த்தரின் முத்திரை என் மேல் – நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர் – நான்
நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
6. தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை


Vallamaiyin Aaviyanavar PowerPoint



வல்லமையின் ஆவியானவர்

வல்லமையின் ஆவியானவர் PPT

Download Vallamaiyin Aaviyanavar Tamil PPT