Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மின்னும் வெள்ளங்கி

1. மின்னும் வெள்ளங்கி பூண்டு
மீட்புற்ற கூட்டத்தார்
பொன்னகர் செல்லும் பாதையில்
பல் கோடியாய்ச் செல்வார்
வெம் பாவம் சாவை இவர்
வென்றார் போர் ஓய்ந்ததே
செம்பொன்னாம் வாசல் திறவும்
செல்வார் இவர் உள்ளே.

2. முழங்கும் அல்லேலூயா
மண் விண்ணை நிரப்பும்
விளங்கும் கோடி வீணைகள்
விஜயம் சாற்றிடும்,
சராசரங்கள் யாவும்
சுகிக்கும் நாள் இதே;
இராவின் துன்பம் நோவுக்கு
ஈடாம் பேரின்பமே.

3. அன்பான நண்பர் கூடி
ஆனந்தம் அடைவார்;
மாண்பான நேசம் நீங்காதே
ஒன்றாக வாழுவார்;
கண்ணீர் வடித்த கண்கள்
களித்திலங்கிடும்
மண்ணில் பிரிந்த உயிர்கள்
மீளவும் சேர்ந்திடும்

4. சிறந்த உந்தன் மீட்பை
சமீபமாக்குமே
தெரிந்து கொள்ளப்பட்டவர்
தொகை நிரப்புமே;
உரைத்த உந்தன் காட்சி
உம்பரில் காட்டுவீர்
இறைவா, ஏங்கும் தாசர்க்கு
இறங்கி வருவீர்.

Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி Lyrics in English

1. minnum vellangi poonndu
meetputta koottaththaar
ponnakar sellum paathaiyil
pal kotiyaaych selvaar
vem paavam saavai ivar
ventar por oynthathae
semponnaam vaasal thiravum
selvaar ivar ullae.

2. mulangum allaelooyaa
mann vinnnnai nirappum
vilangum koti veennaikal
vijayam saattidum,
saraasarangal yaavum
sukikkum naal ithae;
iraavin thunpam Nnovukku
eedaam paerinpamae.

3. anpaana nannpar kooti
aanantham ataivaar;
maannpaana naesam neengaathae
ontaka vaaluvaar;
kannnneer vatiththa kannkal
kaliththilangidum
mannnnil pirintha uyirkal
meelavum sernthidum

4. sirantha unthan meetpai
sameepamaakkumae
therinthu kollappattavar
thokai nirappumae;
uraiththa unthan kaatchi
umparil kaattuveer
iraivaa, aengum thaasarkku
irangi varuveer.

PowerPoint Presentation Slides for the song Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மின்னும் வெள்ளங்கி PPT
Minnum Vellangi PPT

English