Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா எனைமறக்காதே

பல்லவி

தேவா எனைமறக்காதே,-இந்தச்
சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே.

அனுபல்லவி

நேயா உனையன்றி நீசனுக்கார் கதி?
தூயா கிருபைகூர், நான் மகாதோஷி. – தேவா

சரணங்கள்

1. வானுலகோர்தொழும் நாதா!-இந்த
மானிடர்கரையேற வந்தசகாயா!
காலைமாலைகள்தோறும் கரைந்து உருகுகின்ற
கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா? – தேவா

2. பாவியின் மேலிரங்கையா!-பொல்லாப்
பாதகனைக்கைவிடாதே நலமெய்யா!
தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்
தாங்கியாதரித்துந்தன் தயைபுரி ஐயா! – தேவா

3. என்மீறுதல் நினையாதே, எந்தன்
இளமையின் பாவத்தை மனதில்வையாதே.
உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தேனுனையடைந்தேன்,
நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன். – தேவா

4. நெருக்கப்படுகிறேன் தேவா,-என்னை
உருக்கமாய்ப் பாராய், கிறிஸ்தேசுநாதா!
இரக்கம் வைத்தென்றனின் குறைதனை நீக்கு,
என்னை ஆட்கொண்டவா, இயேசு சர்வேசா! – தேவா

5. சரணம், சரணம் சருவேசா!-இந்தத்
தருணம், தருணம் உன்றன் கருணை கூர் நேசா!
மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்
மாபாதகன் எனை ரட்சியாய் நாதா! – தேவா

Deva Enai Marakathae – தேவா எனைமறக்காதே Lyrics in English

pallavi

thaevaa enaimarakkaathae,-inthach
siriyan padunthuyaril thooranirkaathae.

anupallavi

naeyaa unaiyanti neesanukkaar kathi?
thooyaa kirupaikoor, naan makaathoshi. – thaevaa

saranangal

1. vaanulakortholum naathaa!-intha
maanidarkaraiyaera vanthasakaayaa!
kaalaimaalaikalthorum karainthu urukukinta
karmasanndaalanaik kannnnokka laakaathaa? – thaevaa

2. paaviyin maelirangaiyaa!-pollaap
paathakanaikkaividaathae nalameyyaa!
thaarannithannil thavikkumivvaelaiyaith
thaangiyaathariththunthan thayaipuri aiyaa! – thaevaa

3. enmeeruthal ninaiyaathae, enthan
ilamaiyin paavaththai manathilvaiyaathae.
unpaathanjaernthaen, uvanthaenunaiyatainthaen,
ninpaathanthaanae nilaiyaakakkanntaen. – thaevaa

4. nerukkappadukiraen thaevaa,-ennai
urukkamaayp paaraay, kiristhaesunaathaa!
irakkam vaiththentanin kuraithanai neekku,
ennai aatkonndavaa, Yesu sarvaesaa! – thaevaa

5. saranam, saranam saruvaesaa!-inthath
tharunam, tharunam untan karunnai koor naesaa!
maranavaelaiyilum naduththeervai thinaththilum
maapaathakan enai ratchiyaay naathaa! – thaevaa

PowerPoint Presentation Slides for the song Deva Enai Marakathae – தேவா எனைமறக்காதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா எனைமறக்காதே PPT
Deva Enai Marakathae PPT

தேவா சரணம் தருணம் பல்லவி எனைமறக்காதேஇந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே அனுபல்லவி நேயா உனையன்றி நீசனுக்கார் கதி தூயா கிருபைகூர் மகாதோஷி சரணங்கள் வானுலகோர்தொழும் நாதாஇந்த English