Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 52:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 52 ஏசாயா 52:4

ஏசாயா 52:4
பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
முற்காலத்தில் என் மக்கள் தங்கும்படி எகிப்திற்குப் போனார்கள்; அசீரியனும் காரணமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார் “என் ஜனங்கள் முதலில் எகிப்துக்கு வாழச் சென்றனர். பிறகு, அவர்கள் அடிமைகளானார்கள். பின்னர், அசீரியா அவர்களை அடிமைப்படுத்தினான்.

திருவிவிலியம்
ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்; அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.

Isaiah 52:3Isaiah 52Isaiah 52:5

King James Version (KJV)
For thus saith the Lord GOD, My people went down aforetime into Egypt to sojourn there; and the Assyrian oppressed them without cause.

American Standard Version (ASV)
For thus saith the Lord Jehovah, My people went down at the first into Egypt to sojourn there: and the Assyrian hath oppressed them without cause.

Bible in Basic English (BBE)
For the Lord God says, My people went down at first into Egypt, to get a place for themselves there: and the Assyrian put a cruel yoke on them without cause.

Darby English Bible (DBY)
For thus saith the Lord Jehovah: My people went down at the first into Egypt to sojourn there, and Assyria oppressed them without cause;

World English Bible (WEB)
For thus says the Lord Yahweh, My people went down at the first into Egypt to sojourn there: and the Assyrian has oppressed them without cause.

Young’s Literal Translation (YLT)
For thus said the Lord Jehovah: `To Egypt My people went down at first to sojourn there, And Asshur — for nought he hath oppressed it.

ஏசாயா Isaiah 52:4
பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
For thus saith the Lord GOD, My people went down aforetime into Egypt to sojourn there; and the Assyrian oppressed them without cause.

כִּ֣יkee
כֹ֤הhoh
אָמַר֙ʾāmarah-MAHR
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֔הyĕhwiyeh-VEE
מִצְרַ֛יִםmiṣrayimmeets-RA-yeem
יָֽרַדyāradYA-rahd
עַמִּ֥יʿammîah-MEE
בָרִֽאשֹׁנָ֖הbāriʾšōnâva-ree-shoh-NA
לָג֣וּרlāgûrla-ɡOOR
שָׁ֑םšāmshahm
וְאַשּׁ֖וּרwĕʾaššûrveh-AH-shoor
בְּאֶ֥פֶסbĕʾepesbeh-EH-fes
עֲשָׁקֽוֹ׃ʿăšāqôuh-sha-KOH

இணை வசனம்

Genesis 46:6
தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்.

Job 2:3
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.

Psalm 25:3
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக.

Psalm 69:4
நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.

Isaiah 14:25
அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.

Isaiah 36:1
எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.

Jeremiah 50:17
இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

John 15:25
முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

Acts 7:14
பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.


Tags பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள் அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
ஏசாயா 52:4 Concordance ஏசாயா 52:4 Interlinear ஏசாயா 52:4 Image