1 Samuel 14:47
இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம் பண்ணி, எவர்கள் மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.
2 Kings 12:21சிமியாதின் குமாரன், யோசகார் சோமேரின் குமாரன் யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Exodus 6:15சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
Numbers 7:23சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை.
Jeremiah 2:18இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு சமாரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?
2 Samuel 8:3ஆசாபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து,
2 Samuel 8:12ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூட கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.
1 Chronicles 18:5சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
1 Kings 11:23எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய்,
Nehemiah 7:45வாசல் காவலாளரானவர்கள்; சல்லுூமின் புத்திரர் அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.
1 Chronicles 18:9தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
Ezra 2:42வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லுூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
1 Chronicles 18:3சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.
1 Chronicles 1:40சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.
Ezra 2:47கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,
2 Samuel 8:5சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
Judges 5:6ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள்.
1 Chronicles 4:2சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும் லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே.
1 Chronicles 7:34சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
Numbers 26:42தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமுமே; இவைகள் தாணின் குடும்பம்.
Nehemiah 7:49ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,
Numbers 2:5அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
Numbers 7:18இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.
Numbers 10:15இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
Ezra 2:55சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
Nehemiah 7:57சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
Ezra 2:43நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபா கோத்தின் புத்திரர்,
1 Chronicles 2:52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
Genesis 36:23சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
1 Chronicles 4:11சூகாவின் சகோதரனாகிய கேலுூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.
2 Samuel 23:33ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,
Numbers 1:8இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.
Genesis 25:9அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.