உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,
கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர் எல்லாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:
இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,
தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.
தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க, அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,
இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.
When | כִּֽי | kî | kee |
thou goest forth | תֵצֵ֥א | tēṣēʾ | tay-TSAY |
to war | לַמִּלְחָמָ֖ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
against | עַל | ʿal | al |
enemies, thine | אֹֽיְבֶ֑יךָ | ʾōyĕbêkā | oh-yeh-VAY-ha |
delivered hath and | וּנְתָנ֞וֹ | ûnĕtānô | oo-neh-ta-NOH |
the Lord | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
God thy | אֱלֹהֶ֛יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
them into thine hands, | בְּיָדֶ֖ךָ | bĕyādekā | beh-ya-DEH-ha |
taken hast thou and | וְשָׁבִ֥יתָ | wĕšābîtā | veh-sha-VEE-ta |
them captive, | שִׁבְיֽוֹ׃ | šibyô | sheev-YOH |