சங்கீதம் 92 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽ஆண்டவருக்கு நன்றியுரைப்பது␢ நன்று; உன்னதரே!␢ உமது பெயரைப்␢ புகழ்ந்து பாடுவது நன்று.⁾2 ⁽காலையில் உமது பேரன்பையும்␢ இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்⁾3 ⁽பத்துநரம்பு வீணையோடும்␢ தம்புரு, சுரமண்டல இசையோடும்␢ எடுத்துரைப்பது நன்று.⁾4 ⁽ஏனெனில், ஆண்டவரே!␢ உம் வியத்தகு செயல்களால்␢ என்னை மகிழ்வித்தீர்;␢ உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து␢ நான் மகிழ்ந்து பாடுவேன்.⁾5 ⁽ஆண்டவரே! உம் செயல்கள்␢ எத்துணை மேன்மையாவை;␢ உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.⁾6 ⁽அறிவிலிகள் அறியாததும்␢ மூடர் உணராததும் இதுவே:⁾7 ⁽பொல்லார் புல்லைப்போன்று␢ செழித்து வளரலாம்;␢ தீமை செய்வோர் அனைவரும்␢ பூத்துக் குலுங்கலாம்!␢ ஆனால், அவர்கள் என்றும்␢ அழிவுக்கு உரியவரே;⁾8 ⁽நீரோ ஆண்டவரே!␢ என்றுமே உயர்ந்தவர்.⁾9 ⁽ஏனெனில், ஆண்டவரே!␢ உம் எதிரிகள் – ஆம், உம் எதிரிகள் –␢ அழிவது திண்ணம்;␢ தீமை செய்வோர் அனைவரும்␢ சிதறுண்டுபோவர்.⁾10 ⁽காட்டைருமைக்கு நிகரான␢ வலிமையை எனக்கு அளித்தீர்;␢ புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.⁾11 ⁽என் எதிரிகளின் வீழ்ச்சியை␢ நான் கண்ணாரக் கண்டேன்;␢ எனக்கு எதிரான பொல்லார்க்கு␢ நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.⁾12 ⁽நேர்மையாளர் பேரீச்சை மரமெனச்␢ செழித்தோங்குவர்;␢ லெபனோனின் கேதுரு மரமெனத்␢ தழைத்து வளர்வர்.⁾13 ⁽ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்␢ நம் கடவுளின் கோவில் முற்றங்களில்␢ செழித்தோங்குவர்.⁾14 ⁽அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்;␢ என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;⁾15 ⁽‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்;␢ அவரே என் பாறை;␢ அவரிடம் அநீதி ஏதுமில்லை’␢ என்று அறிவிப்பர்.⁾