சங்கீதம் 91 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽உன்னதரின் பாதுகாப்பில்␢ வாழ்பவர், எல்லாம் வல்லவரின்␢ நிழலில் தங்கியிருப்பவர்.⁾2 ⁽ஆண்டவரை நோக்கி,␢ “நீரே என் புகலிடம்; என் அரண்;␢ நான் நம்பியிருக்கும் இறைவன்”␢ என்று உரைப்பார்.⁾3 ⁽ஏனெனில், ஆண்டவர் உம்மை␢ வேடரின் கண்ணியினின்றும்␢ கொன்றழிக்கும்␢ கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.⁾4 ⁽அவர் தம் சிறகுகளால்␢ உம்மை அரவணைப்பார்;␢ அவர்தம் இறக்கைகளின்கீழ்␢ நீர் புகலிடம் காண்பீர்;␢ அவரது உண்மையே␢ கேடயமும் கவசமும் ஆகும்.⁾5 ⁽இரவின் திகிலுக்கும்␢ பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும்␢ நீர் அஞ்சமாட்டீர்.⁾6 ⁽இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும்␢ நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும்␢ நீர் அஞ்சமாட்டீர்.⁾7 ⁽உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும்,␢ உம் வலப்புறம்␢ பதினாயிரம் பேர் தாக்கினாலும்,␢ எதுவும் உம்மை அணுகாது.⁾8 ⁽பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை␢ நீரே பார்ப்பீர்;␢ உம் கண்ணாலேயே நீர் காண்பீர்.⁾9 ⁽ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்;␢ உன்னதரை உம் § உறைவிடமாக்கிக் கொண்டீர்.⁾10 ⁽ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது;␢ வாதை உம் கூடாரத்தை நெருங்காது.⁾11 ⁽நீர் செல்லும் இடமெல்லாம்␢ உம்மைக் காக்கும்படி,␢ தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.⁾12 ⁽உம் கால் கல்லின்மேல் மோதாதபடி,␢ அவர்கள் தங்கள் கைகளில்␢ உம்மைத் தாங்கிக்கொள்வர்.⁾13 ⁽சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும்␢ நீர் நடந்து செல்வீர்;␢ இளஞ்சிங்கத்தின்மீதும்␢ விரியன்பாம்பின்மீதும்␢ நீர் மிதித்துச் செல்வீர்.⁾14 ⁽‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால்,␢ அவர்களை விடுவிப்பேன்;␢ அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,␢ அவர்களைப் பாதுகாப்பேன்;⁾15 ⁽அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது,␢ அவர்களுக்குப் பதிலளிப்பேன்;␢ அவர்களது துன்பத்தில்␢ அவர்களோடு இருப்பேன்;␢ அவர்களைத் தப்புவித்து␢ அவர்களைப் பெருமைப்படுத்துவேன்;⁾16 ⁽நீடிய ஆயுளால் அவர்களுக்கு␢ நிறைவளிப்பேன்;␢ என் மீட்பை அவர்களுக்கு␢ வெளிப்படுத்துவேன்.’⁾சங்கீதம் 91 ERV IRV TRV