Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 2:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 2 லூக்கா 2:12

லூக்கா 2:12
பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

Tamil Indian Revised Version
குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

Tamil Easy Reading Version
ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான்.

திருவிவிலியம்
குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.

Luke 2:11Luke 2Luke 2:13

King James Version (KJV)
And this shall be a sign unto you; Ye shall find the babe wrapped in swaddling clothes, lying in a manger.

American Standard Version (ASV)
And this `is’ the sign unto you: Ye shall find a babe wrapped in swaddling clothes, and lying in a manger.

Bible in Basic English (BBE)
And this is the sign to you: you will see a young child folded in linen, in the place where the cattle have their food.

Darby English Bible (DBY)
And this is the sign to you: ye shall find a babe wrapped in swaddling-clothes, and lying in a manger.

World English Bible (WEB)
This is the sign to you: you will find a baby wrapped in strips of cloth, lying in a feeding trough.”

Young’s Literal Translation (YLT)
and this `is’ to you the sign: Ye shall find a babe wrapped up, lying in the manger.’

லூக்கா Luke 2:12
பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
And this shall be a sign unto you; Ye shall find the babe wrapped in swaddling clothes, lying in a manger.

καὶkaikay
τοῦτοtoutoTOO-toh
ὑμῖνhyminyoo-MEEN
τὸtotoh
σημεῖονsēmeionsay-MEE-one
εὑρήσετεheurēseteave-RAY-say-tay
βρέφοςbrephosVRAY-fose
ἐσπαργανωμένονesparganōmenonay-spahr-ga-noh-MAY-none
κείμενονkeimenonKEE-may-none
ἐνenane
τῇtay
φάτνῃphatnēFAHT-nay

இணை வசனம்

Isaiah 7:14
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

Isaiah 53:1
எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

Psalm 22:6
நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும் ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.

Isaiah 7:11
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.

Exodus 3:12
அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

1 Samuel 2:34
ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள்.

1 Samuel 10:2
நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள்.

2 Kings 19:29
உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

2 Kings 20:8
எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம்நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.


Tags பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள் இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்
லூக்கா 2:12 Concordance லூக்கா 2:12 Interlinear லூக்கா 2:12 Image