Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 5:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 5 புலம்பல் 5:1

புலம்பல் 5:1
கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும். எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்!

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை␢ நினைந்தருளும்! எங்கள்␢ அவமானத்தைக் கவனித்துப்பாரும்.⁾

Title
கர்த்தருக்கு ஒரு ஜெபம்

Other Title
இறைவனின் இரக்கத்திற்காக வேண்டல்

Lamentations 5Lamentations 5:2

King James Version (KJV)
Remember, O LORD, what is come upon us: consider, and behold our reproach.

American Standard Version (ASV)
Remember, O Jehovah, what is come upon us: Behold, and see our reproach.

Bible in Basic English (BBE)
Keep in mind, O Lord, what has come to us: take note and see our shame.

Darby English Bible (DBY)
Remember, O Jehovah, what is come upon us; consider, and see our reproach.

World English Bible (WEB)
Remember, Yahweh, what has come on us: Look, and see our reproach.

Young’s Literal Translation (YLT)
Remember, O Jehovah, what hath befallen us, Look attentively, and see our reproach.

புலம்பல் Lamentations 5:1
கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.
Remember, O LORD, what is come upon us: consider, and behold our reproach.

זְכֹ֤רzĕkōrzeh-HORE
יְהוָה֙yĕhwāhyeh-VA
מֶֽהmemeh
הָ֣יָהhāyâHA-ya
לָ֔נוּlānûLA-noo
הַבִּ֖יטָhabbîṭāha-BEE-ta
וּרְאֵ֥הûrĕʾēoo-reh-A
אֶתʾetet
חֶרְפָּתֵֽנוּ׃ḥerpātēnûher-pa-tay-NOO

இணை வசனம்

Psalm 44:13
எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.

Lamentations 3:61
கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,

Luke 23:42
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.

Habakkuk 3:2
கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.

Lamentations 3:19
எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.

Lamentations 2:20
கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?

Lamentations 2:15
வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

Lamentations 1:20
கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.

Jeremiah 15:15
கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடியபொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடையமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.

Psalm 123:3
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

Psalm 89:50
ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும் நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,

Psalm 79:12
ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.

Psalm 79:4
எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.

Psalm 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

Job 10:9
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.

Job 7:7
என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.

Nehemiah 4:4
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.

Nehemiah 1:8
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,

Nehemiah 1:3
அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.


Tags கர்த்தாவே எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும் எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்
புலம்பல் 5:1 Concordance புலம்பல் 5:1 Interlinear புலம்பல் 5:1 Image