Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 2:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 2 புலம்பல் 2:16

புலம்பல் 2:16
உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.

Tamil Indian Revised Version
உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.

Tamil Easy Reading Version
உனது எல்லா பகைவர்களும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள் உன்னைப் பார்த்து பிரமித்து தம் பற்களைக் கடிக்கிறார்கள். அவர்கள், “நாங்கள் அவர்களை விழுங்கியிருக்கிறோம்! நாங்கள் உண்மையிலேயே இந்த நாளுக்காகவே நம்பிக்கொண்டிருந்தோம். நாங்கள் இறுதியாக இது நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம்” என்பார்கள்.

திருவிவிலியம்
⁽உன் எதிரிகள் அனைவரும்␢ உன்னை நோக்கிக்␢ கோணல்வாய் காட்டுகின்றனர்;␢ சீழ்க்கையடித்துப்␢ பற்களை நறநற வென்று␢ கடிக்கின்றனர்;␢ ‘நாம் அவளைப்␢ பாழாக்கினோம்’ என்றனர்.␢ ‘இந்நாளுக்காகவே␢ நாம் காத்திருந்தோம்;␢ இப்போதுதான் நம்மால்␢ அதைக் காணமுடிந்தது’ என்றனர்.⁾

Lamentations 2:15Lamentations 2Lamentations 2:17

King James Version (KJV)
All thine enemies have opened their mouth against thee: they hiss and gnash the teeth: they say, We have swallowed her up: certainly this is the day that we looked for; we have found, we have seen it.

American Standard Version (ASV)
All thine enemies have opened their mouth wide against thee; They hiss and gnash the teeth; they say, We have swallowed her up; Certainly this is the day that we looked for; we have found, we have seen it.

Bible in Basic English (BBE)
All your haters are opening their mouths wide against you; making hisses and whistling through their teeth, they say, We have made a meal of her: certainly this is the day we have been looking for; it has come, we have seen it.

Darby English Bible (DBY)
All thine enemies open their mouth against thee, they hiss and gnash the teeth: they say, We have swallowed [her] up; this is forsooth the day that we looked for: we have found, we have seen [it].

World English Bible (WEB)
All your enemies have opened their mouth wide against you; They hiss and gnash the teeth; they say, We have swallowed her up; Certainly this is the day that we looked for; we have found, we have seen it.

Young’s Literal Translation (YLT)
Opened against thee their mouth have all thine enemies, They have hissed, yea, they gnash the teeth, They have said: `We have swallowed `her’ up, Surely this `is’ the day that we looked for, We have found — we have seen.’

புலம்பல் Lamentations 2:16
உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
All thine enemies have opened their mouth against thee: they hiss and gnash the teeth: they say, We have swallowed her up: certainly this is the day that we looked for; we have found, we have seen it.

פָּצ֨וּpāṣûpa-TSOO
עָלַ֤יִךְʿālayikah-LA-yeek
פִּיהֶם֙pîhempee-HEM
כָּלkālkahl
אֹ֣יְבַ֔יִךְʾōyĕbayikOH-yeh-VA-yeek
שָֽׁרְקוּ֙šārĕqûsha-reh-KOO
וַיַּֽחַרְקוּwayyaḥarqûva-YA-hahr-koo
שֵׁ֔ןšēnshane
אָמְר֖וּʾomrûome-ROO
בִּלָּ֑עְנוּbillāʿĕnûbee-LA-eh-noo
אַ֣ךְʾakak
זֶ֥הzezeh
הַיּ֛וֹםhayyômHA-yome
שֶׁקִּוִּינֻ֖הוּšeqqiwwînuhûsheh-kee-wee-NOO-hoo
מָצָ֥אנוּmāṣāʾnûma-TSA-noo
רָאִֽינוּ׃rāʾînûra-EE-noo

இணை வசனம்

Lamentations 3:46
எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.

Psalm 35:21
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.

Psalm 56:2
என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்: உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.

Job 16:9
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.

Psalm 22:13
பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத்திறக்கிறார்கள்.

Psalm 35:16
அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.

Psalm 37:12
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.

Psalm 124:3
அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில் நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.

Jeremiah 51:34
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.

Acts 7:54
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

Zephaniah 2:8
மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்துபெருமை பாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.

Obadiah 1:12
உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும் அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.

Hosea 8:8
இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

Psalm 57:3
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்

Psalm 109:2
துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள்.

Psalm 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.

Isaiah 49:19
அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.

Jeremiah 50:7
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.

Jeremiah 50:17
இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

Ezekiel 25:3
அம்மோன் புத்திரருக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,

Ezekiel 25:6
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கைகொட்டி, உன் காலால் தட்டி வர்மம்வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,

Ezekiel 25:15
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து, பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால்,

Ezekiel 36:3
நீ தீர்க்கதரிசனம் உரைத்துச்சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,

Psalm 41:8
தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.


Tags உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள் ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள் அதை விழுங்கினோம் நாம் காத்திருந்த நாள் இதுவே இப்பொழுது நமக்குக் கிடைத்தது அதைக் கண்டோம் என்கிறார்கள்
புலம்பல் 2:16 Concordance புலம்பல் 2:16 Interlinear புலம்பல் 2:16 Image