ஏசாயா 57 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽நேர்மையாளர் அழிந்து போகின்றனர்;␢ இதை மனத்தில் கொள்வார்␢ எவரும் இல்லை;␢ இறைப்பற்றுடையோர்␢ எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்;␢ அதைக் கருத்தில் கொள்வார்␢ எவரும் இல்லை;␢ ஏனெனில் நேர்மையாளர்␢ தீமையின் முன்னின்று␢ எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.⁾2 ⁽அவர்கள் அமைதிக்குள்␢ சென்றடைகின்றனர்;␢ நேர்மையான வழிமுறையைப்␢ பின்பற்றுவோர்␢ தம் இறுதிப் படுக்கைகளில்␢ இளைப்பாறுகின்றனர்.⁾3 ⁽சூனியக்காரியின் மக்களே,␢ விபசாரன், விலைமாதின் வாரிசே,␢ அருகில் வாருங்கள்.⁾4 ⁽யாரைப் பார்த்து நீங்கள்␢ நகைக்கின்றீர்கள்?␢ யாருக்கு எதிராக வாயைப்பிளந்து␢ நாக்கை நீட்டுகின்றீர்கள்?␢ நீங்கள் கொடுமையின்␢ பிள்ளைகளன்றோ!␢ பொய்மையின் சந்ததியன்றோ!⁾5 ⁽கருவாலி மரத் தோப்பிலும்,␢ பசுமையான மரம் ஒவ்வொன்றின் கீழும்␢ காமத்தீயால் எரிகிறீர்கள்;␢ பள்ளத்தாக்குகளில்,␢ பாறைப் பிளவுகளின் அடிப்புறத்தில்,␢ உங்கள் பச்சிளங் குழந்தைகளைக்␢ கொல்கிறீர்கள்.⁾6 ⁽பள்ளத்தாக்கின் வழவழப்பான␢ கற்களினின்று உருவான சிலைகளே␢ உன் பங்கு; ஆம், அவையே உன் பங்கு;␢ அவற்றிற்கு நீ நீர்மப்பலியை␢ ஊற்றியுள்ளாய்;␢ உணவுப் படையலைப் படைத்துள்ளாய்;␢ இவற்றால் நான் அமைதி அடைவேனோ?⁾7 ⁽வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல்␢ உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்;␢ பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய்.⁾8 ⁽கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால்␢ உன் நினைவுக்குறியை வைத்தாய்;␢ என்னை விட்டுவிட்டு␢ உன் மஞ்சத்தைத் திறந்தாய்;␢ ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்;␢ நீ எவருடைய படுக்கையை விரும்பினாயோ,␢ அவர்களோடு ஓர் உடன்பாடு␢ செய்து கொண்டாய்;␢ அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய்.⁾9 ⁽நீ எண்ணெயுடன்␢ மோலேக்கிடம் சென்றாய்;␢ நறுமணப் பொருட்களைப்␢ பெருக்கிக் கொண்டாய்;␢ தொலை நாடுகளுக்கு␢ உன் தூதர்களை அனுப்பினாய்;␢ பாதாளம் மட்டும் அனுப்பினாய்.⁾10 ⁽உன் வழிப்பயணம் தொலைவானதால்␢ களைத்துப் போனாய்; ஆயினும்,␢ ‘இது வீண்’ என்று நீ சொல்லவில்லை;␢ உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்;␢ ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.⁾11 ⁽யாருக்கு நீ அஞ்சி நடுங்கினாய்?␢ நீ என்னிடம் பொய் சொன்னாயே!␢ நீ என்னை நினைவுகூரவில்லை;␢ என்னைப் பற்றி உன் மனத்தில்␢ எண்ணவுமில்லை!␢ வெகுகாலமாய் நான்␢ அமைதியாய் இருந்ததால் அன்றோ␢ நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்?⁾12 ⁽உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்;␢ அவை உனக்கு உதவா.⁾13 ⁽நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது,␢ நீ திரட்டிய சிலைகள்␢ உன்னை விடுவிக்கட்டும்!␢ காற்று அவை அனைத்தையும்␢ அடித்துக் கொண்டுபோம்;␢ வெறும் மூச்சே அவற்றை␢ ஊதித் தள்ளிவிடும்;␢ என்னிடம் அடைக்கலம் புகுவோர்␢ நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்;␢ என் திருமலையை உடைமையாய்ப்␢ பெறுவர்.⁾14 ⁽அமையுங்கள்; பாதையை அமையுங்கள்;␢ அதைத் தயார் செய்யுங்கள்;␢ ‘என் மக்களின் வழியிலிருக்கும்␢ தடையை அகற்றுங்கள்’␢ என்று கூறப்படும்.⁾15 ⁽உயர்ந்தவரும் உன்னதரும்␢ காலம் கடந்து வாழ்பவரும்,␢ ‘தூயவர்’ என்ற பெயரைக்␢ கொண்டவரும் கூறுவது இதுவே:␢ உயர்ந்த தூய இடத்தில்␢ நான் உறைகின்றேன்;␢ நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும்␢ நான் வாழ்கின்றேன்;␢ நொறுங்கிய உள்ளத்தினரை␢ ஊக்குவிக்கவும்␢ நலிந்த நெஞ்சத்தினரைத்␢ திடப்படுத்தவும்␢ நான் குடியிருக்கின்றேன்.⁾16 ⁽ஏனெனில், என்றென்றும் நான்␢ குற்றஞ்சாட்டமாட்டேன்;␢ எப்பொழுதும்␢ சினம் கொண்டிருக்கமாட்டேன்;␢ ஏனெனில், நான் தோற்றுவித்த␢ உயிர் மூச்சாகிய மனித ஆவி␢ என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.⁾17 ⁽பேராசை என்னும் தீமையை முன்னிட்டு␢ நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து,␢ அவனை அடித்து நொறுக்கினேன்;␢ சீற்றம் கொண்டு என்னை␢ அவனுக்கு மறைத்துக் கொண்டேன்;␢ அவனோ என்னைவிட்டு விலகி␢ மனம்போன போக்கிலே சென்றான்.⁾18 ⁽அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்;␢ ஆயினும் அவனைக் குணமாக்குவேன்;␢ அவனை நடத்திச் சென்று அவனுக்கு␢ மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.⁾19 ⁽அவனுக்காக அழுவோரின் உதடுகளில்␢ நன்றி ஒலி எழச்செய்வேன்;␢ அமைதி! தொலையில் இருப்போருக்கும்␢ அருகில் இருப்போருக்கும் அமைதி!␢ என்கிறார் ஆண்டவர்.␢ அவர்களை நான் நலமடையச் செய்வேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾20 ⁽கொடியவரோ கொந்தளிக்கும்␢ கடல்போல் இருக்கின்றனர்;␢ அந்தக் கடலால்␢ அமைதியாயிருக்க இயலாது;␢ அதன் நீர்த்திரள்கள் சேற்றையும்␢ சகதியையும் கிளறிவிடுகின்றன;⁾21 ⁽கொடியவர்களுக்கு அமைதியே இல்லை,␢ என்கிறார் என் கடவுள்.⁾