2 நாளாகமம் 32:22
இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.
Tamil Indian Revised Version
இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிமக்களையும் அசீரியருடைய ராஜாவாகிய. சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லோருடைய கைக்கும் விலக்கிக் காப்பாற்றி, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.
Tamil Easy Reading Version
இவ்வாறு கர்த்தர், அசீரியா அரசனாகிய சனகெரிபிடமிருந்தும் மற்ற ஜனங்களிடமிருந்தும் எசேக்கியாவையும், அவனது ஜனங்களையும் காப்பாற்றினார். கர்த்தர் எசேக்கியா மீதும் எருசலேம் ஜனங்கள் மீதும் அக்கறைக்கொண்டார்.
திருவிவிலியம்
இவ்வாறு, அசீரிய மன்னன் சனகெரிபிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் ஆண்டவர் எசேக்கியாவும் எருசலேம் மக்களையும் காப்பாற்றி, *அவர்களுக்கு எப்பக்கமும் பாதுகாப்பு அளித்தார்.*
King James Version (KJV)
Thus the LORD saved Hezekiah and the inhabitants of Jerusalem from the hand of Sennacherib the king of Assyria, and from the hand of all other, and guided them on every side.
American Standard Version (ASV)
Thus Jehovah saved Hezekiah and the inhabitants of Jerusalem from the hand of Sennacherib the king of Assyria, and from the hand of all `others’, and guided them on every side.
Bible in Basic English (BBE)
So the Lord gave Hezekiah and the people of Jerusalem salvation from the power of Sennacherib, the king of Assyria, and from all others, giving them rest on every side.
Darby English Bible (DBY)
And Jehovah saved Hezekiah and the inhabitants of Jerusalem from the hand of Sennacherib the king of Assyria, and from the hand of all, and protected them on every side.
Webster’s Bible (WBT)
Thus the LORD saved Hezekiah and the inhabitants of Jerusalem from the hand of Sennacherib the king of Assyria, and from the hand of all others, and guided them on every side.
World English Bible (WEB)
Thus Yahweh saved Hezekiah and the inhabitants of Jerusalem from the hand of Sennacherib the king of Assyria, and from the hand of all [others], and guided them on every side.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saveth Hezekiah and the inhabitants of Jerusalem from the hand of Sennacherib king of Asshur, and from the hand of all, and He leadeth them round about;
2 நாளாகமம் 2 Chronicles 32:22
இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.
Thus the LORD saved Hezekiah and the inhabitants of Jerusalem from the hand of Sennacherib the king of Assyria, and from the hand of all other, and guided them on every side.
| וַיּוֹשַׁע֩ | wayyôšaʿ | va-yoh-SHA | |
| יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| יְחִזְקִיָּ֜הוּ | yĕḥizqiyyāhû | yeh-heez-kee-YA-hoo | |
| וְאֵ֣ת׀ | wĕʾēt | veh-ATE | |
| יֹֽשְׁבֵ֣י | yōšĕbê | yoh-sheh-VAY | |
| יְרֽוּשָׁלִַ֗ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM | |
| מִיַּ֛ד | miyyad | mee-YAHD | |
| סַנְחֵרִ֥יב | sanḥērîb | sahn-hay-REEV | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| אַשּׁ֖וּר | ʾaššûr | AH-shoor | |
| וּמִיַּד | ûmiyyad | oo-mee-YAHD | |
| כֹּ֑ל | kōl | kole | |
| וַֽיְנַהֲלֵ֖ם | waynahălēm | va-na-huh-LAME | |
| מִסָּבִֽיב׃ | missābîb | mee-sa-VEEV |
இணை வசனம்
Psalm 18:48
அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
John 16:13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
Hosea 1:7
யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.
Isaiah 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
Isaiah 33:22
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
Isaiah 31:4
கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.
Isaiah 10:24
ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்கு பயப்படாதே; அவன் உன்னைக்கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
Psalm 144:10
நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர்.
Psalm 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
Psalm 71:20
அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
Psalm 48:14
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
Psalm 37:39
நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
2 Thessalonians 3:5
கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.
Tags இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்
2 நாளாகமம் 32:22 Concordance 2 நாளாகமம் 32:22 Interlinear 2 நாளாகமம் 32:22 Image